தாணேவைத் தொடர்ந்து மும்பையிலும் 144 தடை!

தொடர்ந்து நிலவிவரும் அரசியல் பதற்றத்தின் காரணமாக தாணே மாவட்டத்தைத் தொடர்ந்து மும்பையிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தாணேவைத் தொடர்ந்து மும்பையிலும் 144 தடை!

தொடர்ந்து நிலவிவரும் அரசியல் பதற்றத்தின் காரணமாக தாணே மாவட்டத்தைத் தொடர்ந்து மும்பையிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை முறித்து, பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என சிவசேன கட்சி எம்.எல்.ஏ.க்கள், மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி துக்கியுள்ளன. 

இதனால் மகாராஷ்டிர மாநிலத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகின்றது. மாநிலத்தின் பல பகுதிகளில் போலீசார் உச்சகட்ட பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் சிவசேனா கட்சியினர் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழலில், தாணே மற்றும் மும்பையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தாணேவில் ஜூன் 30ஆம் தேதி வரை அரசியல் கூட்டங்கள், ஊர்வலங்கள், சுவரொட்டிகள் ஆகியவற்றுக்கு தடைவிதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, மும்பையிலும் ஜூலை 10-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com