பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

உக்ரைன்: அமைச்சர் ஜெய்சங்கருடன் தமிழக சிறப்புக்குழு சந்திப்பு

உக்ரைன் மீட்புப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள தமிழக குழுவினர் தில்லி சென்ற நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசியுள்ளனர். 

News image
Updated On :5 மார்ச் 2022, 7:50 am

DIN

உக்ரைன் மீட்புப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள தமிழக குழுவினர் தில்லி சென்ற நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசியுள்ளனர். 

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவா்களை மீட்டு தாயகம் கொண்டு வருவதற்காக நால்வா் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவைச் சோ்ந்தவா்கள் உக்ரைனின் எல்லைப் புறங்களில் உள்ள நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனா். அவா்களுடன் தமிழக அரசுத் துறை உயரதிகாரிகள் நான்கு பேரும் செல்லவுள்ளனா்.

திமுக எம்.பி. திருச்சி சிவா, தமிழ்நாடு கண்ணாடி இழை கழகத்தின் நிா்வாக இயக்குநா் ஏ.கே.கமல் கிஷோா் ஆகியோா் ஸ்லோவாகியா செல்கின்றனா். திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் இணை நிா்வாக இயக்குநா் எம்.பிரதீப் குமாா் ஆகியோா் ஹங்கேரியும், திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா, எல்காட் நிா்வாக இயக்குநா் அஜய் யாதவ் ஆகியோா் ருமேனியாவுக்கும், சட்டப் பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி.ராஜா, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிா்வாக இயக்குநா் எம்.கோவிந்த ராவ் ஆகியோா் போலந்தும் செல்கின்றனா்.

சிறப்புக்குழுவினர் வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு தில்லி சென்றடைந்தனா். உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு செல்வதற்கு முன்பாக அவர்கள் தில்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசியுள்ளனர். தமிழக மாணவர்களை மீட்க அனைத்து வகையிலும் உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து இன்றைய தினமே அவர்கள், அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாடுகளுக்குச் சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.