பஞ்சாப் முதல்வராகவுள்ள பகவந்த் மானுக்கு ஸ்டாலின் வாழ்த்து
பஞ்சாபின் புதிய முதல்வராக இன்று பதவியேற்க உள்ள பகவந்த் மானுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


பஞ்சாபின் புதிய முதல்வராக இன்று பதவியேற்க உள்ள பகவந்த் மானுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் 92 இடங்களில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இன்று பகத் சிங் ஊரான கத்தர் கலனில் பஞ்சாப் முதல்வராக ஆம் ஆத்மியின் பகவந்த் மான் பொறுப்பேற்க உள்ளார்.
இதையும் படிக்க | பகத் சிங் ஊரில் பஞ்சாப் புதிய முதல்வர் இன்று பதவியேற்பு
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,
பஞ்சாப் முதல்வராக இன்று பதவியேற்க உள்ள பகவந்த மானுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மொழிவாரி உரிமைகள் மற்றும் மாநில உரிமைகளுக்காக தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் நீண்ட வரலாற்றை பகிர்ந்து கொண்டுள்ளன. பஞ்சாபில் புதிய ஆட்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் எனத் தெரிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...