பகத் சிங் ஊரில் பஞ்சாப் புதிய முதல்வர் இன்று பதவியேற்பு
பகத் சிங்கின் ஊரான கத்தர் கலனில் பஞ்சாப் முதல்வராக ஆம் ஆத்மியின் பகவந்த் மான் இன்று பதவியேற்கிறார்.


பகத் சிங்கின் ஊரான கத்தர் கலனில் பஞ்சாப் முதல்வராக ஆம் ஆத்மியின் பகவந்த் மான் இன்று பதவியேற்கிறார்.
பஞ்சாபில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை அவருடைய மாளிகையில் சனிக்கிழமை சந்தித்து ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரினார் பகவந்த் மான்.
இந்நிலையில், பதவியேற்பு விழாவானது பகத் சிங்கின் கிராமமான கத்கர் கலனில் இன்று நடைபெறவுள்ளன. அவருடன் 16 எம்எல்ஏ-க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர். இந்த நிகழ்விற்காக 100 ஏக்கர் பரப்பளவில் விழா அரங்கு அமைக்கப்பட்டுள்ளன.
பதவியேற்பு விழாவிற்கு ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்பது குறித்து தகவல் ஏதும் வெளிவரவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...