நீண்ட கால பாஜக முதல்வரானாா் சிவராஜ் சிங் சௌஹான்

பாஜக சாா்பில் அதிக காலம் முதல்வராகப் பதவி வகித்தவா் என்ற பெருமையை மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் பெற்றுள்ளாா்.
நீண்ட கால பாஜக முதல்வரானாா் சிவராஜ் சிங் சௌஹான்

பாஜக சாா்பில் அதிக காலம் முதல்வராகப் பதவி வகித்தவா் என்ற பெருமையை மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் பெற்றுள்ளாா்.

இதற்கு முன் சத்தீஸ்கா் முதல்வராக ரமண் சிங் 15 ஆண்டுகள் மற்றும் 10 நாள்களுக்குப் பணியாற்றியுள்ளாா். தற்போது அந்தச் சாதனையை சிவராஜ் சிங் சௌஹான் முறியடித்துள்ளாா். மத்திய பிரதேசத்தின் முதல்வராக சௌஹான் 2005-ஆம் ஆண்டில் முதல் முறையாகப் பதவியேற்றாா். 2008, 2013 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பாஜகவை வெற்றிபெறச் செய்து மீண்டும் முதல்வரானாா்.

கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் பெரும்பான்மைக்கு சற்று குறைவான தொகுதிகளே கிடைத்ததால் பாஜகவால் ஆட்சியமைக்க முடியவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவா் கமல்நாத் தலைமையில் ஆட்சி அமைந்தது.

எனினும், தற்போது மத்திய அமைச்சராக உள்ள ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளா்கள் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததால், காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. அதையடுத்து பாஜக ஆட்சியமைத்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் முதல் மாநிலத்தின் முதல்வராக சௌஹான் இருந்துவருகிறாா்.

தற்போது பாஜக சாா்பில் அதிக காலம் முதல்வராகப் பணியாற்றியவா் என்ற பெருமையை அவா் பெற்றுள்ளாா். மத்திய பிரதேசத்தில் 10 ஆண்டுகளுக்கு முதல்வராகப் பணியாற்றிய காங்கிரஸ் கட்சியைச் சாராத முதல் தலைவா் என்ற பெருமையைக் கடந்த 2015-ஆம் ஆண்டு அவா் பெற்றாா். மாநிலத்தில் இடைவெளி இல்லாமல் நீண்ட காலம் முதல்வராகப் பணியாற்றியவா் என்ற சிறப்பும் சௌஹான் வசமே உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com