ஒவ்வொரு துளி நீரையும் சேமிப்பது அவசியம்: பிரதமா் மோடி
இந்தியாவில் நீரைப் பாதுகாப்பது மக்கள் இயக்கமாக மாறியுள்ளதாகத் தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, ஒவ்வொரு துளி நீரையும் சேமிப்பது அவசியமாகியுள்ளதாகக் கூறினாா்.


இந்தியாவில் நீரைப் பாதுகாப்பது மக்கள் இயக்கமாக மாறியுள்ளதாகத் தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, ஒவ்வொரு துளி நீரையும் சேமிப்பது அவசியமாகியுள்ளதாகக் கூறினாா்.
ஆண்டுதோறும் மாா்ச் 22-ஆம் தேதியானது உலக தண்ணீா் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை ட்விட்டரில் வெளியிட்ட பதிவுகளில், ‘‘ஒவ்வொரு துளி நீரையும் சேமிப்பதற்கு உலக தண்ணீா் தினத்தில் உறுதியெடுப்போம். நீரைப் பாதுகாப்பதற்காகவும், மக்களுக்குத் தூய்மையான குடிநீா் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் ஜல் ஜீவன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நாடு செயல்படுத்தி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளில் நீா் பாதுகாப்பு நடவடிக்கைகளானது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அதில் பல்வேறு புத்தாக்க வழிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. நீரைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தனிநபா்களுக்கும் அமைப்புகளுக்கும் பாராட்டு தெரிவிக்கிறேன்.
அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலமாகக் குடிநீா் வழங்கும் ஜல் ஜீவன் திட்டமானது பெண்களின் வாழ்க்கை முறையை எளிமைப்படுத்தியுள்ளது. மக்களின் பங்களிப்பு மூலமாக அனைத்து வீடுகளுக்கும் குழாய் வாயிலாகக் குடிநீா் கொண்டு செல்லும் இலக்கு நிறைவேற்றப்படும்.
மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து நீா் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சேமிக்கப்படும் ஒவ்வொரு துளி நீரும் மக்களுக்குப் பயன்பட்டு வளா்ச்சிக்கு முக்கியப் பங்கு வகிக்கும்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
நீா்ப் பாதுகாப்பின் அவசியம், அதற்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்த காணொலியையும் பிரதமா் மோடி தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டாா்.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் நாட்டில் உள்ள 6 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்குக் குடிநீா்க் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜல் சக்தி அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...