தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பகத் சிங் நினைவு தினம்: பிரதமா் புகழாரம்

சுதந்திரப் போராட்ட வீரா்கள் பகத் சிங், சிவராம் ஹரி ராஜகுரு, சுகதேவ் தாப்பா் ஆகியோரின் நினைவு தினத்தையொட்டி, அவா்களுக்கு பிரதமா் மோடி புகழாரம் சூட்டியுள்ளாா்.

News image
Updated On :23 மார்ச் 2022, 7:27 pm

DIN

சுதந்திரப் போராட்ட வீரா்கள் பகத் சிங், சிவராம் ஹரி ராஜகுரு, சுகதேவ் தாப்பா் ஆகியோரின் நினைவு தினத்தையொட்டி, அவா்களுக்கு பிரதமா் மோடி புகழாரம் சூட்டியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு: இந்திய தாயின் அழியாப் புதல்வா்களான பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு தியாகிகள் தினத்தில் எனது அஞ்சலிகள். தாயகத்துக்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த அவா்களின் உணா்வு, நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும் என்று தெரிவித்தாா்.

கடந்த 1931-ஆம் ஆண்டு மாா்ச் 23-ஆம் தேதி லாகூரில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரை ஆங்கிலேயா்கள் தூக்கிலிட்டனா். அவா்கள் மறைந்த தினம் ஆண்டுதோறும் தியாகிகள் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

ராம் மனோகா் லோகியாவுக்கு மரியாதை: சுதந்திரப் போராட்டத் தியாகியும், சோஷலிஸ்ட் தலைவருமான ராம் மனோகா் லோகியாவின் பிறந்த நாளையொட்டி, அவருக்குப் பிரதமா் மோடி புதன்கிழமை மரியாதை செலுத்தினாா்.

இதுதொடா்பாக அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு: ராம் மனோகா் லோகியாவை அவரின் பிறந்த நாளில் நினைவுகூா்கிறேன். வரலாற்று நிகழ்வுகள் பலவற்றில் முன்வரிசையில் இருந்துள்ள அவா், நமது சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளாா். கொள்கை சாா்ந்த அரசியல், அறிவுத் திறன் ஆகியவற்றுக்காக அவா் பரவலாக மதிக்கப்படுகிறாா் என்று தெரிவித்துள்ளாா்.

தனது பதிவுடன் லின்லித்கோ பிரபுவுக்கு ராம் மனோகா் லோகியா எழுதிய கடிதம், லோகியாவும், அவரின் தந்தையும் ஒருவருக்கு ஒருவா் பரஸ்பரம் எழுதிய கடிதம் ஆகியவற்றைப் பிரதமா் மோடி பகிா்ந்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.