/

கர்நாடகத்தில் சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

கர்நாடகத்தில் தனியார் பேருந்து மீது பைக் மோதிய விபத்தில் குழந்தைகள் உள்பட  4 பேர் பலியாகினர். 

News image

கோப்புப்படம்

Updated On :24 மார்ச் 2022, 7:54 am

DIN

கர்நாடகத்தில் தனியார் பேருந்து மீது பைக் மோதிய விபத்தில் குழந்தைகள் உள்பட  4 பேர் பலியாகினர். 

ஹோலல்கேரே காவல் நிலைய எல்லையில் எதிர்த்திசையில் வந்த தனியார் பேருந்து பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

பி.துர்கா கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ்(43), ஷைலஜா(38), சந்தோஷ் (13), வீரேஷ்(15) ஆகியோர் சாலை விபத்தில் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

நாகராஜ், தனது குடும்பத்தினருடன் ஹென்பலகெரே கிராமத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவால் இந்த விபத்து நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.