சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சுரங்க குத்தகை விவகாரம்: ஜார்க்கண்ட் முதல்வருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

ஜார்க்கண்டில் சுரங்கம் குத்தகைக்கு விடப்பட்டது தொடர்பாக முதல்வர் ஹேமந்த் சோரனிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

News image
Updated On :2 மே 2022, 5:13 pm

DIN


ஜார்க்கண்டில் சுரங்கம் குத்தகைக்கு விடப்பட்டது தொடர்பாக முதல்வர் ஹேமந்த் சோரனிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜார்க்கண்ட் சுரங்கம் மற்றும் சுற்றுச்சூழல் இலாகாவை முதல்வர் சோரன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அப்போது தனக்கு சாதகமாக சுரங்கம் குத்தகைக்கு விடப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் சோரன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேள்வியெழுப்பியுள்ள தேர்தல் ஆணையம், அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக பதிலளிக்க அவருக்கு வரும் 10-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், சட்டப்பேரவையிலிருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.