எச்சரிக்கை! குழந்தைகளிடையே ஆஸ்துமாவை அதிகரிக்கிறது கரோனா: ஆய்வு

கரோனா தொற்று குழந்தைகளிடையே ஆஸ்துமா, நுமோனியா, மூச்சு சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்துவதாக அமெரிக்க மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
குழந்தைகளிடையே ஆஸ்துமாவை அதிகரிக்கிறது கரோனா
குழந்தைகளிடையே ஆஸ்துமாவை அதிகரிக்கிறது கரோனா


கரோனா தொற்று குழந்தைகளிடையே ஆஸ்துமா, நுமோனியா, மூச்சு சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்துவதாக அமெரிக்க மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

உங்கள் குழந்தைகளுக்கு ஆஸ்துமா பிரச்னை உள்ளதா?, எனில் கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க அவர்களுக்கு கூடுதல் முயற்சிகளை எடுக்க வேண்டும். ஏனெனில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆஸ்துமா பிரச்னைகளை அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒவ்வாமை மற்றும் மருத்துவ நோய் எதிர்ப்பு இதழில் இந்த ஆய்வு குறித்து விளக்கப்பட்டுள்ளது. அதில், கரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிக அளவில் ஆஸ்துமா பிரச்னைகளுக்காக மருத்துவமனைகளை அணுகியுள்ளதாகவும், சிகிச்சை பெற்றுள்ளதாகவும், அவசரகால இன்ஹேலர்களை பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது. 
 
கரோனாவால் பாதிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு அவர்கள் ஆஸ்துமா பிரச்னைகளுக்காக மருத்துவமனை வருவது அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்படாத குழந்தைகளுடன் ஒப்பிடும்போது இது அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கரோனாவால் பாதிக்கப்படாத குழந்தைகள் அதே இடைவெளியுள்ள ஆறு மாதங்களில் ஆஸ்துமாவில் முன்னேற்றமடைவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவைச் சேர்ந்தவரும், குழந்தைகள் நல மருத்துவருமான கிறிஸ்டியன் செளவ் இது குறித்து பேசும்போது, கரோனா முதல் அலையின்போது அமெரிக்காவில் 62 ஆயிரம் குழந்தைகளுக்கு பிசிஆர் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 7,700 குழந்தைகளுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

வீட்டிலேயே இருத்தல், முகக்கவசம் அணிதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் முதல் அலையில் ஆஸ்துமா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதில் குழந்தைகளும் ஒத்துழைத்ததால் ஆஸ்துமா பெரிதாக தீவிரமடையவில்லை.

ஆனால் தற்போது நடத்தப்பட்ட ஆய்வில், கரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தொற்று குணமடைந்த பிறகு ஆஸ்துமா பிரச்னைகள் தீவிரமடைவது கண்டறியப்பட்டுள்ளது. 

அமெரிக்காவைச் சேர்ந்த நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் முதல்நிலையில் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை எச்சரித்துள்ளது. கரோனாவுக்கு பிறகு ஆஸ்துமா பிரச்னைகள் தீவிரமடையும், நுமோனியா மற்றும் மூச்சு சார்ந்த பிரச்னைகள் அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளது என்று கிறிஸ்டியன் செளவ் குறிப்பிட்டார்.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com