கிருஷ்ணா: அசானி புயல் காரணமாக ஆந்திர கடலுக்கு யாரும் செல்ல வேண்டாம் என ஆந்திர அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அசானி புயல் காரணமாக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மக்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கிருஷ்ணா மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் பாஷா புதன்கிழமை எச்சரித்துள்ளார்.
விசாகப்பட்டினம் - காக்கிநாடா இடையே சூறாவளி தாக்கப் இருப்ப்பதால், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் காற்றின் வேகம் மணிக்கு 80 கிமீ வேகத்தில் வீசக்கூடும். ஆட்சியர் அலுவலகம், ஆர்டிஓ அலுவலகங்கள் மற்றும் மண்டல் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் பாஷா தெரிவித்தார்.
காக்கிநாடா மாவட்டத்தின் சில பகுதிகளில் புதன்கிழமை காலை முதல் மழை பெய்து வருகிறது.
விஜயவாடா சர்வதேச விமான நிலையத்திலும் அசானி புயல் காரணமாக திட்டமிடப்பட்ட விஜயவாடாவிற்கு செல்லும், வந்தடையும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னையிலிருந்து வரும் விமானங்களை ரத்து செய்வதாக இண்டிகோ அறிவித்துள்ளது. விசாகப்பட்டினம், ராஜமுந்திரி மற்றும் கடப்பாவிற்கான இணைப்பு சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
ராஜமுந்திரி விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன. விசாகப்பட்டினம், ஹைதராபாத், பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் இருந்து 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

திருப்பதி லட்டுக்கு பிறந்தநாள்!

வங்கிக் கணக்கில் ரூ. 100 கோடி! எரிவாயு மானியம் சரிபார்த்த பெண் அதிர்ச்சி!
குஜராத் இடைத்தேர்தல்: பாஜகவின் சதீஷ் படேல் முன்னிலை!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



