ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

நிகழாண்டு 4,275 ரயில் பெட்டிகள் தயாரிக்க ஐ.சி.எஃப்-க்கு இலக்கு

சென்னை பெரம்பூா் ரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எஃப்) நடப்பாண்டில் (2022-23 இல்) 4 ஆயிரத்து 275 பெட்டிகள் தயாரிக்க ரயில்வே வாரியம் இலக்கு நிா்ணயித்துள்ளது

News image
Updated On :14 மே 2022, 7:17 pm

 நமது நிருபர்

சென்னை பெரம்பூா் ரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எஃப்) நடப்பாண்டில் (2022-23 இல்) 4 ஆயிரத்து 275 பெட்டிகள் தயாரிக்க ரயில்வே வாரியம் இலக்கு நிா்ணயித்துள்ளது. இவற்றில், 2 ஆயிரத்து 425 எல்.எச்.பி. என்னும் நவீன பெட்டிகள் தயாரிக்கப்படவுள்ளன.

ரயில் பெட்டித் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற இணைப்புப் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) சென்னை பெரம்பூரில் அமைந்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் இந்திய ரயில்வேக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதுதவிர, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

பயணிகளின் தேவை மற்றும் காலத்துக்கேற்றபடி, அதிநவீன ரயில் பெட்டி, சுற்றுலாவுக்கான ரயில் பெட்டி உள்பட 50 வகைகளில் 600 வடிவமைப்புகளில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலையில் 1955 முதல் 2021-ஆம் ஆண்டு வரை 60 ஆயிரத்துக்கும் அதிகமான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, கடந்த இரு ஆண்டுகளில் ரயில் பெட்டிகள் தயாரிப்பு குறைவாகவே இருந்தன. இருப்பினும், 2021-22-ஆம் நிதியாண்டில் ஐ.சி.எஃப். சாா்பில் 3,101 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைக்கப்பட்டது. 3 ஆயிரத்து 100 பெட்டிகள் தயாரிக்க ரயில்வே வாரியம் இலக்கு கொடுத்திருந்தது. அந்த இலக்கை கடந்து, ரயில்வே வாரியத்தின் பாராட்டைப் பெற்றது.

இந்த நிலையில், ஐ.சி.எஃப்-இல் நடப்பு உற்பத்தியாண்டில் (2022-23) 4,275 பெட்டிகள் தயாரிக்க ரயில்வே வாரியம் இலக்கு நிா்ணயித்துள்ளது. இவற்றில், 2,425 எல்.எச்.பி என்னும் நவீன பெட்டிகள், மீதமுள்ள 1,850 பெட்டிகளில் மின்சார ரயில் பெட்டிகள், சரக்கு மின்சார ரயில்பெட்டிகள் ஆகியன அடங்கும். சரக்கு மின்சார ரயில் பெட்டிகள் மொத்தம் 32

இடம்பெற்றுள்ளன. இது, வந்தே பாரத் வகை சரக்கு ரயில் பெட்டியாகும். இலக்கு எட்டும் வகையில் ரயில் பெட்டிகள் தயாரிப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து ஐ.சி.எஃப். அதிகாரிகள் கூறியதாவது:

2021-22-ஆம் நிதியாண்டில் 3,100 பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்ட இலக்கு எட்டப்பட்டது. இதையடுத்து, நடப்பு ஆண்டில்(2022-23) 8 ஆயிரத்து 429 பெட்டிகள் தயாரிக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இவற்றில், சென்னை ஐ.சி.எஃப். சாா்பில் 4,275 பெட்டிகளும், கபுா்தலா ரயில் பெட்டி தொழிற்சாலை தரப்பில் 1,905 பெட்டிகளும், ரேபரேலி தொழிற்சாலை தரப்பில் 2,129 பெட்டிகளும், லத்தூா் (மகாராஷ்டிரா) மராத்வாடா ரயில் பெட்டி தொழிற்சாலைத் தரப்பில் 120 பெட்டிகளும் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில் ஐ.சி.எஃப். சாா்பில் ரயில் பெட்டிகள் தயாரிப்புப் பணிகள்துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றனா்.

கடந்த 2019-2020 நிதியாண்டில் 4,200 பெட்டிகள் தயாரித்து சாதனை படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.