குழந்தையைக் கொன்ற சிறுவன் கைது; விசாரித்த காவலர்களுக்கு பேரதிர்ச்சி

ஒரு வயது குழந்தையைக் கொலை செய்த குற்றத்தில் 13 வயது சிறுவன் ஞாயிறன்று கைது செய்யப்பட்டார். தனது குற்றத்தை சிறுவன் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
குழந்தையைக் கொன்ற சிறுவன் கைது; விசாரித்த காவலர்களுக்கு பேரதிர்ச்சி
குழந்தையைக் கொன்ற சிறுவன் கைது; விசாரித்த காவலர்களுக்கு பேரதிர்ச்சி

லக்னௌ: ஒரு வயது குழந்தையைக் கொலை செய்த குற்றத்தில் 13 வயது சிறுவன் ஞாயிறன்று கைது செய்யப்பட்டார். தனது குற்றத்தை சிறுவன் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

குழந்தையைக் கொலை செய்தது ஏன் என்று விசாரித்த காவலர்களுக்கு, சிறுவன் கூறிய தகவல் பேரதிர்ச்சியாக இருந்துள்ளது.

நான்கு நாள்களுக்கு முன்பு, சிறுவனின் குடும்பத்தாரை, கொலையுண்ட குழந்தையைன் தந்தை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், சிறுவனையும் அவர் அடித்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்து திட்டமிட்டுக் குழந்தையைக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

லக்னௌ அருகே சைர்பூர் காவல்நிலைய பகுதியில் அமைந்துள்ள பள்ளியின் குடிநீர் தொட்டியில் இருந்து இரண்டு நாள்களுக்கு முன்பு ஒரு வயது பெண் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து காவலர்கள் விசாரணையத் தொடங்கினர்.

இறுதியில், குழந்தையை சிறுவன் கொலை செய்யப்பட்டது உறுதியானதைத் தொடர்ந்து அவன் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறுவன் கூறியதாவது, ஒரு வயது குழந்தை, அவளது வீட்டு வாயிலில் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். உடனே குழந்தையைத் தூக்கிக் கொண்டு என் பள்ளிக்குச் சென்று குழந்தையின் கால்களில் செங்கல்லைக் கட்டி தண்ணீர் தொட்டிக்குள் போட்டேன் என்று அவனது பெற்றோர் முன்னிலையில் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளான்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com