மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள்? கார்த்தி சிதம்பரம்

எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள் என்று சிபிஐ சோதனை குறித்து கார்த்தி சிதம்பரம் தனது சுட்டுரைப் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

News image

எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள்? கார்த்தி சிதம்பரம்

Updated On :17 மே 2022, 7:13 am

DIN

புது தில்லி: எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள் என்று சிபிஐ சோதனை குறித்து கார்த்தி சிதம்பரம் தனது சுட்டுரைப் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கார்த்தி சிதம்பரம் தனது சுட்டுரைப் பக்கத்தில், எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள்? என்று கேள்வி எழுப்பியிருப்பதோடு, எத்தனை முறை சோதனை நடந்தது என்பதை நானே மறந்துவிட்டேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

சென்னை, மும்பை, தில்லி உள்ளிட்ட நகரங்களில் 7 இடங்களில் இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையில் முறைகேடு நடந்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணை செய்து வரும் நிலையில், கார்த்தி சிதம்பரம் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

கார்த்தி சிதம்பரம் மீதான புகாரில், நுங்கம்பாக்கத்தில் உள்ள ப. சிதம்பரம் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.