இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

முன்னாள் பிரதமர் தேவகெளடா பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து

இன்று முன்னாள் பிரதமர் தேவகெளடா  பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :18 மே 2022, 8:17 am

DIN

புது தில்லி: இன்று முன்னாள் பிரதமர் தேவகெளடா  பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி அவர் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் தேவகெளடா மே 18, 1933-ல் ஹரடனஹள்ளி என்ற கிராமத்தில் உள்ள ஹொலேனரசிபுரா தாலுகாவில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு வயது 89. இவா் 11-வது இந்திய பிரதமராக கடந்த 1996-97 ஆகிய ஆண்டுகளில் சுமார் 11 மாதங்கள்  பதவி வகித்துள்ளார் மற்றும் 1994 முதல் 1996 வரை 14-வது கர்நாடக முதல்வராகவும் இருந்துள்ளார். 

முன்னாள் பிரதமர் தேவகெளடா பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி சுட்டுரையில், "முன்னாள் பிரதமரும் மரியாதைக்குரிய தேவகவுடா ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளையும்,  ஆரோக்கியத்தையும் தரட்டும்" என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.