சென்னை, கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் மூவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக, சென்னை ஐ.ஐ.டி.யில் 198 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும் கரோனா தொற்று பரவியுள்ளது.
இன்று மேலும் 3 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்தம் இதுவரை 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத், அவா்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில்,
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலருக்கு கரோனா அறிகுறிகள் ஏற்பட்டன. இதையடுத்து அவா்களுடன் தொடா்பில் இருந்த 120 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த 9 பேருக்கும் லேசான அறிகுறி இருப்பதால் பல்கலைக்கழக வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதையும் படிக்கலாம்: உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை தோண்டியெடுப்பு: ஆனால்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரளத்தில் திடீர் நிலச்சரிவு! அலறியடித்து ஓடிய மக்கள்!
மோடி அரசு, பணக்காரர்களுக்கானது! ரமணா பட பாணியில் மாணிக்கம் தாகூர் பேச்சு!
காவல் நிலையத்தில் ஆஜராவதில் விலக்கு! செந்தில் பாலாஜி மனு வாபஸ்!
பட்ஜெட்டை திருப்பதிக்கு எடுத்துச் சென்றால், பாவங்கள் போய்விடுமா? - மு.க. ஸ்டாலின்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



