/

மனநலம் குன்றிய சகோதரரைக் கொன்றவர் கைது; அதிர்ச்சி தரும் காரணம்

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில், மனநலம் குன்றிய சகோதரரை, மூத்த சகோதரர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
மனநலம் குன்றிய சகோதரரைக் கொன்றவர் கைது; அதிர்ச்சி தரும் காரணம்
Updated On :27 மே 2022, 12:31 pm

PTI


பிஜ்னோர்: உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில், மனநலம் குன்றிய சகோதரரை, மூத்த சகோதரர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் முபாரக்பூர் கிராமத்தைச் சேர்ந்த அசோக் (32) என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது 22 வயது சகோதரர் பிரதீப் மனநலம் குன்றியவர் என்பதால், அவர் தரும் தொல்லைகளால் குடும்பத்தினர் மனச்சோர்வடைந்து விட்டதால், கொலை செய்ததாகக் கூறியுள்ளார்.

பாதி எரிந்த நிலையில் நிலையில், பிரதீப்பின் உடலை மே 23ம் தேதி முபாரக்பூர் கிராமத்தில் கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அவரது மூத்த சகோதரர் அசோக்கை கைது செய்தனர்.

சந்தேகத்தின் அடிப்படையிலேயே முதலில் அசோக்கை கைது செய்ததாகவும், விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் காவல்துறை தெரிவிக்கிறது.

பிரதீப் மன வளர்ச்சி குன்றியிருந்ததால் வீட்டில் செய்யும் தொல்லைகளை தாங்க முடியாமல் இருந்ததகாவும், இதனால் குடும்பத்தினர் மனச்சோர்வு அடைந்திருந்ததாகவும் கூறுகிறார்.

கடந்த 22ஆம் தேதி அவர் வீட்டுக்கு வெளியே தகராறு செய்ததால், தொண்டையை அறுத்துக் கொன்றுவிட்டு வயல்வெளிக்கு கொண்டு சென்று எரித்ததாகவும் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.