
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் 2021 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல்நிலைத் தேர்வும் கடந்த ஜனவரி மாதம் முதன்மைத் தேர்வும் அதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் நேர்காணலும் நடைபெற்று முடிந்த நிலையில் அதற்கான இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. வெற்றி பெற்ற 685 பேரில் ஸ்ருதி ஷர்மா என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். அங்கிதா அகர்வால், காமினி சிங்லா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளனர்.
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளை https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம்.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றவர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சிவில் சர்வீசஸ் (முதன்மை) தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 75 வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் இவ்வேளையில், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் முக்கியமான நேரத்தில் தங்கள் நிர்வாக வாழ்க்கையைத் தொடங்கும் இளைஞர்களுக்கு என் வாழ்த்துக்கள்' என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், ''தேர்வில் தேர்ச்சி பெற முடியாதவர்களின் ஏமாற்றத்தை நான் முழுமையாகப் புரிந்துகொள்கிறேன், ஆனால் அவர்கள் எந்தத் துறையிலும் முத்திரை பதித்து இந்தியாவை பெருமைப்படுத்தக்கூடிய சிறந்த இளைஞர்கள் என்பதையும் நான் அறிவேன். அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.