கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

என்.டி.ஆர். பல்கலைக்கழகம் ஒய்.எஸ்.ஆர். எனப் பெயர் மாற்றம்: ஆந்திர ஆளுநர் ஒப்புதல்

ஆந்திரத்தில் என்.டி.ஆர். பல்கலைக்கழகத்தின் பெயரை ஒய்.எஸ்.ஆர். பல்கலைக்கழகம் என மாற்றும் மசோதாவுக்கு அம்மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

News image
Updated On :1 நவம்பர் 2022, 7:14 am

DIN

ஆந்திரத்தில் என்.டி.ஆர். பல்கலைக்கழகத்தின் பெயரை ஒய்.எஸ்.ஆர். பல்கலைக்கழகம் என மாற்றும் மசோதாவுக்கு அம்மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ளது புகழ்பெற்ற என்.டி.ஆர். (என்.டி.ராமாராவ்) மருத்துவப் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் பெயரை, தனது தந்தையின் பெயரான ஒய்.எஸ்.ஆர்.(ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி) என மாற்ற ஆந்திர முதல்வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்தார். 

இதற்கான மசோதா ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 21 அன்று நிறைவேற்றப்பட்டது. 

இதற்கு என்.டி.ஆரின் தெலுங்கு தேசம் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், பல்வேறு வகைகளில் போராட்டமும் நடத்தினர். 

இந்நிலையில், என்.டி.ஆர். பல்கலைக்கழகத்தின் பெயரை ஒய்.எஸ்.ஆர். பல்கலைக்கழகம் என மாற்றும் மசோதாவுக்கு அம்மாநில ஆளுநர் பிஸ்வ பூஷன் ஹரிச்சந்திரன் ஒப்புதல் அளித்துள்ளார்.

முன்னதாக, என்.டி.ஆர். பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றுவதற்கு ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சித் தலைவரும் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளாவே எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.