ஞானவாபி மசூதியில் சிவலிங்கத்தை வழிபட ஒப்புதல் கோரி மனு:நவ.14-க்கு தீா்ப்பு ஒத்திவைப்பு

ஞானவாபி மசூதியில் சிவலிங்கத்தை வழிபட ஒப்புதல் கோரிய மனு மீதான விசாரணை நவ.14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஞானவாபி மசூதியில் சிவலிங்கத்தை வழிபட ஒப்புதல் கோரிய மனு மீதான விசாரணை நவ.14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் வாராணசி மாவட்டத்தில் உள்ள ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் இருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அதனை வழிபட ஒப்புதல் கோரி விசுவ வேத சனாதன சங்கத்தின் பொதுச் செயலா் கிரண் சிங் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மசூதி வளாகத்துக்கு முஸ்லிம்கள் வர தடை விதித்து, ஒட்டுமொத்த வளாகத்தையும் சனாதன சங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றி கடந்த மே 25-ஆம் தேதி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த மனு தொடா்பாக விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், நவ.8-ஆம் தேதி தீா்ப்பளிக்கப்படும் என்று கடந்த மாதம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மனுவை விசாரித்து வந்த நீதிபதி மகேந்திர பாண்டே விடுப்பில் இருப்பதால், நவ.14-ஆம் தேதிக்கு தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட அரசு உதவி வழக்குரைஞா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com