அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பெண்ணைக் கொன்று உடல் பாகங்களை தில்லி முழுவதும் வீசிய இளைஞர்: காட்டிக் கொடுத்த தடயம்

காதலித்து, திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்துவந்த காதலியைக் கொன்று 35 துண்டுகளாக வெட்டி, தில்லி நகர் முழுவதும் வீசிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

News image
பெண்ணைக் கொன்று உடல் பாகங்கள் தில்லி முழுவதும் வீசிய இளைஞர்: காட்டிக் கொடுத்த தடயம்
Updated On :14 நவம்பர் 2022, 12:36 pm

DIN


புது தில்லி : காதலித்து, திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்துவந்த காதலியைக் கொன்று 35 துண்டுகளாக வெட்டி, தில்லி நகர் முழுவதும் வீசிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வீட்டிலிருந்து சுமார் 18 நாள்களாக, சிறிது சிறுதாக உடல் பாகங்களை எடுத்துச் சென்று தில்லியின் பல்வேறு பாகங்களிலும் வீசியதாகக் குற்றவாளி ஒப்புக் கொண்டுள்ளார்.

குற்றவாளி அஃப்தாப் அமீன் பூனாவாலா (28), மும்பையைச் சேர்ந்த 26 வயது பெண் ஷ்ரத்தாவுடன் தில்லியில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

தனது பெண் காணாமல் போனதாக, தில்லி காவல்நிலையத்தில் பெண்ணின் தந்தை நவம்பர் 8ஆம் தேதி புகாரளித்தபோதுதான், இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இது குறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது, குற்றவாளியும், கொலை செய்யப்பட்ட பெண்ணும் மும்பையில் ஒரே இடத்தில் பணியாற்றியிருக்கிறார்கள். பிறகு இருவரும் காதலித்துள்ளனர். இதனை பெண்ணின் குடும்பத்தினர் ஏற்காததால், ஆறு மாதங்களுக்கு முன்பு, ஷரத்தா வீட்டை விட்டு வெளியேறி தில்லியின் சத்தர்பூர் பகுதியில், அமீனுடன் வசித்து வந்துள்ளார்.

பலியான பெண்ணின் தந்தை, தனது மகளின் முகநூல் வழியாகத்தான், அவர் எப்படியிருக்கிறார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது குறித்து அறிந்து வந்துள்ளார். ஆனால் சில நாள்களாக அவர் முகநூல் பக்கத்துக்கு வராமல் இருந்தது தந்தைக்கு கவலையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் தில்லி வந்து, தனது மகன் வசித்து வந்த குடியிருப்பில் விசாரித்த போது, அங்கு யாருமே இல்லை என்று தெரிய வந்தது.

இதையடுத்து, தனது மகள் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து காணாமல் போன பெண்ணை காவல்துறையினர் தேடியுள்ளனர்.

பெண்ணுடன் வாழ்ந்து வந்த அமீனை கைது செய்து விசாரித்ததில், ஷரத்தா, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அமீனை வற்புறுத்தி வந்தாகவும், மே மாதம் 18ஆம் தேதி இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஷரத்தாவை அமீன் கொலை செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

ஷரத்தாவைக் கொன்றுவிட்டு, வீட்டுக்கு ஒரு குளிர்பதனப் பெட்டி வாங்கி வந்து, அதில், அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி பதப்படுத்தி வைத்துள்ளார். பிறகு தினமும் ஒவ்வொரு பாகமாக எடுத்துச் சென்று வனப்பகுதி உள்ளிட்ட தில்லியின் பல்வேறு இடங்களிலும் வீசியுள்ளார். ஷரத்தாவின் உடல் பாகங்களை சுமார் 18 நாள்கள் சிறிது சிறிதாக எடுத்துச் சென்று வீசியதாக அமீன் வாக்குமூலம் அளித்துள்ளான்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.