திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்திடீர் திருப்பம்! வேல்முருகன் தலைமையில் புதிய அணி!முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மும்பை புல்லட் ரயில் திட்டம்! நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவு!

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தில், புறநகர் பகுதியான விக்ரோலியில் உள்ள கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இடத்தைத் தவிர்த்து மற்ற நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்துவிட்டதாக...

News image

கோப்புப்படம்

Updated On :21 நவம்பர் 2022, 4:35 pm

DIN


மும்பை: மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தில், புறநகர் பகுதியான விக்ரோலியில் உள்ள கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ் மேனுஃபேக்ச்சரிங் கம்பெனி லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான இடத்தைத் தவிர்த்து, மற்ற நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்துவிட்டதாக மும்பை உயர் நீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.

விக்ரோலியில் உள்ள கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக 2019 ஆம் ஆண்டு முதலே மாநில அரசுக்கும் நிறுவனத்துக்கும் இடையே சட்டப்பூர்வ மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில், புல்லட் ரயில் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு இழப்பீடு வழங்கி மகாராஷ்டிர அரசு செப்டம்பர் 15ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அந்நிறுவனம் கடந்த மாதம் மனுத் தாக்கல் செய்தது. இதற்கு நீதிபதிகள் ஆர்.டி. தனுகா மற்றும் எஸ்.ஜி.டிகே ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனு மீதான விசாரணை டிசம்பர் 5-ஆம் தேதி முதல் தொடங்கும் எனத் தெரிவித்தது.

மாநில அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் அசுதோஷ் கும்பகோனி, திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இந்த விவகாரம் அவசரமானது என்றார். திட்டத்திற்கு தேவையான முழு நிலமும் மும்பையிலிருந்து அகமதாபாத் வரை கையகப்படுத்திய நிலையில், கோத்ரெஜுக்கு சொந்தமான நிலத்தை தவிர்த்து மற்ற நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளது என்றார் கும்பகோனி.

முன்னதாக மாநில அரசும், தேசிய அதிவேக ரயில் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனமும் நிலம் கையகப்படுத்தும் பணியில் கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ் நிறுவனம் தேவையற்ற தடைகளை உருவாக்குவதால் திட்டம் தாமதப்படுவதாக கூறியிருந்தது.

இந்த கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ் நிறுவனம் மறுத்ததுள்ள நிலையில், நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் சட்டவிரோதமானது என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.