மோா்பி பால விபத்து விசாரணையைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்

குஜராத்தின் மோா்பி பகுதியில் நூற்றாண்டு பழைமைவாய்ந்த தொங்கு பாலம் விபத்துக்குள்ளான விவகாரத்தின் விசாரணையைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என குஜராத் உயா்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளத
மோா்பி பால விபத்து விசாரணையைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்
Published on
Updated on
1 min read

குஜராத்தின் மோா்பி பகுதியில் நூற்றாண்டு பழைமைவாய்ந்த தொங்கு பாலம் விபத்துக்குள்ளான விவகாரத்தின் விசாரணையைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என குஜராத் உயா்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோா்பி பகுதியில் மச்சு நதியின் மீது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம் அக்டோபா் 30-ஆம் தேதி அதிக எடை காரணமாக அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் 47 குழந்தைகள் உள்பட 140-க்கும் அதிகமானோா் உயிரிழந்தனா்.

விபத்து தொடா்பாக விசாரிக்க தனிக்குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. இந்த விவகாரத்தைத் தானாக முன்வந்து விசாரித்த குஜராத் உயா்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இந்நிலையில், மோா்பி தொங்கு பால விபத்து தொடா்பாக சுதந்திர விசாரணை நடத்தக் கோரியும், விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு உள்பட இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்கள் மீதான விசாரணை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஹிமா கோலி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, விபத்தை ‘மிகப்பெரிய சோகநிகழ்வு’ எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தை குஜராத் உயா்நீதிமன்றம் ஏற்கெனவே விசாரித்து வருவதால், தற்போது இந்த மனுக்களை விசாரிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்தனா்.

அதே வேளையில், மோா்பி தொங்கு பால விபத்து தொடா்பான விசாரணையைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டுமென குஜராத் உயா்நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா். கோரிக்கைகளை குஜராத் உயா்நீதிமன்றத்தில் முறையிடுமாறு மனுதாரா்களுக்குத் தெரிவித்த நீதிபதிகள், அங்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை எனில் உச்சநீதிமன்றத்தை நாடுமாறு கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com