எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ராகுலுடன் நடக்க நடிகர்களுக்கு பணம்? நடைப்பயணம் குறித்து பாஜக குற்றச்சாட்டு

ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுல் காந்தியுடன் சேர்ந்து நடப்பதற்கு காங்கிரஸ் கட்சி நடிகர்களுக்கு பணம் கொடுப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. 

News image
நடைப்பயணத்தில் ராகுலுடன் நடிகை ரியா சென் (கோப்புப் படம்)
Updated On :23 நவம்பர் 2022, 11:22 am

DIN


ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுல் காந்தியுடன் சேர்ந்து நடப்பதற்கு காங்கிரஸ் கட்சி நடிகர்களுக்கு பணம் கொடுப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. 

காங்கிரஸ் ஒற்றுமைப் பயணத்தில் நடிகைகள் பூஜா பட், அமோல் பலேகர், ரியா சென், ராஷ்மி தேசாய், சின்னத் திரை நடிகர் சுஷாந்த் சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதைத் தொடர்ந்து பாஜக இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. 

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, பாஜக ஆதாரமாக காட்டும் வாட்ஸ்ஆப் குறுஞ்செய்தி பொய்யானது என விமர்சித்துள்ளது. 

அமித் மால்வியா ரானே உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் நடிகர்களுடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் விலை பேசிய வாட்ஸ்ஆப் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்து இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக முன்வைத்துள்ளனர். 

அந்த வாட்ஸ்ஆப் தரவுகளில், நவம்பர் மாத நடைப்பயணத்தில் ராகுல் காந்தியுடன் சேர்ந்து நடப்பதற்கான நேரப் பட்டியல் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. 

இதற்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்தை சீர்குலைக்கவும், அவப்பெயர் ஏற்படுத்தவும் பாஜகவினர் சதிச் செயலில் ஈடுபடுவதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. 

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது மத்தியப் பிரதேசத்தில் தொடர்ந்து 76-வது நாளாக ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.