தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஜி20 மாநாடு: டிச.5ல் தில்லி செல்கிறார் மம்தா!

ஜி20 மாநாட்டில் பங்கேற்க டிசம்பர் 5ஆம் தேதி புது தில்லி செல்ல உள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை தெரிவித்தார். 

News image
Updated On :24 நவம்பர் 2022, 12:21 pm

DIN

ஜி20 மாநாட்டில் பங்கேற்க டிசம்பர் 5ஆம் தேதி புது தில்லி செல்ல உள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை தெரிவித்தார். 

ஜி20 உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் கடந்த நவம்பர் 15, 16 தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டு நிறைவு விழாவில் ஜி20 தலைமைத்துவம் இந்தியாவிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. 

அப்போது, அனைத்து நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலமாக ஜி20 மாநாட்டை உலக நலனுக்கான செயலூக்கம் அளிக்கும் அமைப்பாக உருவாக்க முடியும் என்று பிரதமா் மோடி கூறினாா். இந்த தலைமைப் பொறுப்பை டிசம்பா் 1-ஆம் தேதியிலிருந்து இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்கவுள்ளது.

இந்நிலையில், அடுத்த ஓராண்டில் ஜி20 மாநாட்டில் செயல்படவேண்டிய கூட்டு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையிலான ஏற்பாடுகள் தில்லியில் நடைபெற உள்ளது. 

இந்த மாநாட்டிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள நிலைகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொள்ள முடிவு செய்துள்ளார்.

இதற்காக டிசம்பர் 5ஆம் தேதி தில்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ள விருப்பதாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

அடுத்த ஜி20 உச்சி மாநாட்டை 2023இல் இந்தியா நடத்துகிறது. ஜி20 கூட்டமைப்பில் வளர்ந்த மற்றும் வளா்ந்து வரும் நாடுகளான ஆா்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேஸில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜொ்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷியா, செளதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகிய 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.