தெலங்கானா மாநில முதல்வரும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவ் தனது தேசியக் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே உள்ள தெலங்கானா ராஷ்டிர சமிதி என்ற கட்சியின் பெயர் 'பாரத் ராஷ்டிர சமிதி'(Bharat Rashtra Samithi) என்று மாற்றப்பட்டுள்ளது.
சந்திரசேகர் ராவ் தலைமையில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் இதுகுறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வரும் 2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சியில் சந்திரசேகா் ராவ் ஈடுபட்டு வருகிறாா். அதற்காக பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத எதிா்க்கட்சித் தலைவா்களை அவா் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறாா்.
மேலும் தேசிய அளவில் அரசியலில் பங்கெடுப்பது குறித்து கடந்த சில மாதங்களாவே ஆலோசித்து வரும் கேசிஆர், தற்போது தனது கட்சியை தேசியக் கட்சியாக மாற்றி அறிவித்துள்ளார்.
டிசம்பர் 9-ஆம் தேதி கட்சி சார்பில் தில்லியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கேசிஆர் உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
தொகுதி நலனுக்காக தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம்

மே 30 - நெல்லை - திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்!

அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில்... ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல: சிபிஎம் விமர்சனம்!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy


