தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

காஸியாபாத்தில் மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்

காஸியாபாத்தில், குற்றவாளிகள் செய்த கொடுமை நிர்பயா சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் இருப்பதாக தில்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. 

News image

காஸியாபாத்தில் மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்

Updated On :19 அக்டோபர் 2022, 2:38 pm IST


புது தில்லி: காஸியாபாத்தில், 38 வயது மதிக்கத்தக்க பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் செய்த கொடுமை நிர்பயா சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் இருப்பதாக தில்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. 

தில்லியைச் சேர்ந்த பெண் கடத்தப்பட்டு, 2 நாள்களுக்குப் பின் ஒரு கோணிப்பையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாலையோரத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டார்.

இது குறித்து மகளிர் ஆணையம் காவல்துறையினருக்கு அனுப்பியிருக்கும் நோட்டீஸில், கடந்த 16ஆம் தேதி தனது சகோதரரின் பிறந்தநாள் விழாவுக்குச் செல்ல காஸியாபாத்தில் ஆட்டோ ரிக்சாவுக்காக காத்திருந்த போது, அவ்வழியாக வந்த நான்கு பேர் காரில் அவரைக் கடத்திச் சென்றுள்ளனர்.

அவர்களுடன் மேலும் ஒருவரும் சேர்ந்து அப்பெண்ணை இரண்டு நாள்களாக கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவரது பிறப்புறுப்பில் இரும்புக் கம்பி நுழைக்கப்பட்டிருந்தது.அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதும், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதன் நகல் மற்றும் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக மகளிர் ஆணையம் தில்லி காவல்துறையிடம் விளக்கம் கேட்டுள்ளது.

இந்த சம்பவம் மிகவும் வெறுக்கத்தக்க, மிகவும் பாதிக்கத்தக்கதாக அமைந்துவிட்டதாகவும், பெண்ணுக்கு குற்றவாளிகள் செய்த கொடுமைகள் நிர்பயா சம்பவத்தையே நினைவுபடுத்துவதாகவும் மகளிர் ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும், இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான் பெண்களும் குழந்தைகளும் இதுபோன்ற மிகக் கொடூரமான துன்புறுத்தலுக்கு ஆளாக வேண்டும் என்றும் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.