பிரதமர் மோடியின் பயணத்தை முன்னிட்டு தயாராகி வருகிறது கேதார்நாத்
கேதார்நாத்: பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தை முன்னிட்டு, கேதார்நாத் முழுக்க முழு வீச்சில் தயாராகி வருகிறது.
கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, அங்கு சாலைகள் மற்றும் ஹேமகுந்த் சாஹிப் ரோப்வேவுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை தொடங்கவும், கேதார்நாத்தில் நிலவும் சூழ்நிலைகளை ஆய்வு செய்யவும் பிரதமர் நரேந்திர மோடி நாளை கேதார்நாத் செல்கிறார்.
நாளை காலை கேதார்நாத் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தவிருக்கிறார். அதன்பிறகு, பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
இது குறித்து பத்திநாத் கேதார்நாத் கோயில் சமிதியின் மூத்த பூசாரி கங்கா தார் லிங்கா, கூறுகையில், 2013ஆம் ஆண்டு நிலச்சரிவு மற்றும் வெள்ளத்துக்குப் பிறகு சுற்றுலா அதிகரித்துள்ளது. அண்மையில் கூட கேதார்நாத் தாமுக்கு 15 லட்சம் பேர் வந்துள்ளனர். இதற்குக் காரணம் சாலைகள் அமைக்கப்பட்டதுதான். எல்லோரும் எளிதாக வந்து செல்கிறதுதான் காரணம் என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.