
தெலங்கானாவில் ஒற்றுமை நடைப்பயணத்தின் போது சிறுவர்களுடன் ஓட்டப்பந்தையம் விளையாடினார் ராகுல் காந்தி.
நாடு முழுவதும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி, தற்போது தெலங்கானாவில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறாா்.
தமிழகத்தில் செப்.17-ம் தேதி தொடங்கிய நடைப் பயணமானது கேரளம், கர்நாடகம், ஆந்திரத்தைக் கடந்து தற்போது தெலங்கானா மாநிலத்தை அடைந்துள்ளது.
ராகுல் காந்தி 16 நாள்கள் தெலங்கானாவில் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இதனிடையே நவம்பர் 4 ஆம் தேதி ஒருநாள் ஓய்வெடுக்க உள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தெலங்கானாவில் சிறுவர்களுடன் நடைப்பயணம் செய்து கொண்டிருந்த போது திடீரென நடைப்பயணத்தை ஓட்டப்பந்தயமாக மாற்றினார் ராகுல் காந்தி. அவருடன் சேர்ந்து சிற்வர்கள், பாதுகாவலர்கள் அனைவரும் ஓடினர். இந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.