தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

சாலை விதிகள் விழிப்புணர்வு கோப்புகளை ஆளுநருக்கு மீண்டும் அனுப்பிய தில்லி அரசு

விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பான கோப்புகளை பரிசீலனை செய்ய துணைநிலை ஆளுநருக்கு தில்லி அரசு மீண்டும் அனுப்பியுள்ளது.

News image

சாலை விதிகள் விழிப்புணர்வு கோப்புகளை ஆளுநருக்கு மீண்டும் அனுப்பிய தில்லி அரசு

Updated On :31 அக்டோபர் 2022, 12:30 pm


புது தில்லி: சாலையில் சிவப்பு விளக்கு எரியும் போது வாகனங்களை நிறுத்தி வைக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பான கோப்புகளை பரிசீலனை செய்ய துணைநிலை ஆளுநருக்கு தில்லி அரசு மீண்டும் அனுப்பியுள்ளது.

தில்லி காற்று மாசுபாட்டால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த விழிப்புணர்வால் ஏற்படும் மாற்றம் குறித்து கேள்வி எழுப்பி, இதனை மறுபரிசீலனை செய்யுமாறு தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்ஸேனா தில்லி அரசிடம் கூறியிருந்த நிலையில், இந்தக் கோப்புகள் மீண்டும் ஆளுநருக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த விழிப்புணர்வால், ஏற்படும் மாற்றம் குறித்த ஆதாரங்களை இணைத்து கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், நாடு முழுவதும் சுமார் 40 நகரங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.