
பஞ்சாபின் 10 மாவட்டங்களில் புதிதாக முதியோர் இல்லங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் பல்ஜித் கௌர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,
பதிண்டா, ஃபதேகர் சாஹிப், ஜலந்தர், கபுர்தலா, பாட்டியாலா, டர்ன் தரன், குர்தாஸ்பூர், ஷஹீத் பகத் சிங் நகர், எஸ்ஏஎஸ் நகர் மற்றும் மலேர்கோட்லா ஆகிய இடங்களில் இந்த முதியோர் இல்லங்கள் அமைக்கப்படும் என்று சமூகப் பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் கூறினார்.
இந்த முதியோர் இல்லம் ஒவ்வொன்றிலும் 25 முதல் 150 வரை தங்கும் திறன் கொண்டதாக இருக்கும்.
அரசு சாரா நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கங்கள் மூலம் இந்த நிறுவனங்களுக்கு நிதியுதவி அளித்து அவற்றை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது என்று கௌர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.