சீரியல் கில்லர் கைது: காரணத்தைக் கேட்டு அதிர்ந்துபோன காவல்துறை

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் நான்கு காவலாளிகள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 19 வயது குற்றவாளியை வெள்ளிக்கிழமை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சீரியல் கில்லர் கைது: காரணத்தைக் கேட்டு அதிர்ந்துபோன காவல்துறை
சீரியல் கில்லர் கைது: காரணத்தைக் கேட்டு அதிர்ந்துபோன காவல்துறை

சாகர்: மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் நான்கு காவலாளிகள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 19 வயது குற்றவாளியை வெள்ளிக்கிழமை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று கஜௌரி பகுதியில் மற்றொரு காவலாளியையும் அந்த குற்றவாளி கொலை செய்த நிலையில், கொலை நடந்த இடங்களில் செல்லிடப்பேசி கோபுரங்களில் பதிவான செல்லிடப்பேசி எண்களைக் கொண்டு, வெள்ளிக்கிழமை நள்ளிரவு 3.30 மணிக்கு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த நபர், இதுவரை 6 காவலாளிகளைக் கொலை செய்திருப்பதாகவும், சில ஆண்டுகளுக்கு முன்பு புனேவில் ஒரு காவலாளி உள்பட 6 பேரைக் கொன்றிருப்பதாகவும், பிரபலமடைய வேண்டும் என்பதற்காகவே தான் இதுபோன்ற செய்ததாக காவல்துறையிடம் கூறியதால், காவலர்கள் அதிர்ந்து போயினர்.

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் நான்காவது காவலாளி, மண்டை எலும்பு உடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பலியானார். 

முன்னதாக, கொலைக் குற்றவாளி குறித்து துப்பு கொடுத்தால் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என்றும் காவல்துறை அறிவித்திருந்தது.

முன்னதாக, காவலாளிகள் தொடர்ந்து கொலை செய்யப்பட்ட நிலையில், புதன்கிழமை இரவு ஒருவர் கொலைத் தாக்குதலுக்கு உள்ளாகி, கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், மக்கள் அனைவரும் இது சீரியல் சில்லரின் அட்டூழியமா அல்லது சைக்கோ கில்லரின் வேலையா என்று அச்சத்தில் உறைந்துபோயினர்.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சாகர் மாவட்டத்தில் நான்கு காவலாளிகள் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் கடந்த 3 கொலைகள் மட்டும் 72 மணி நேரத்தில் நடந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து காவலர்கள் கூறுகையில், கட்டடத்துக்கு வெளியே உறங்குவர்கள்தான் கொலையாளியின் குறியாக இருக்கிறார்கள். கொலைக்கு சுத்தி, பெரிய கல் போன்றவை பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

முதல் காவலாளி, தொழிற்சாலைக்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்த போது சுத்தியால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது சம்பவம், கல்லூரி வாயிலில் பணியில் இருந்த காவலாளி மிகப்பெரிய கல்லைக் கொண்டு தாக்கிக் கொலை செய்யப்பட்டார். புதன்கிழமை இரவு மற்றொரு காவலாளி மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மண்டை ஓடு உடைந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் பலியானார்.

இதற்கு முன்பு, கடந்த மே மாதம் மக்ரோனியா ரயில் நிலைய மேம்பாலத்துக்குக் கீழே உறங்கிக் கொண்டிருந்த மற்றொரு காவலாளி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து காவலர்கள் வழக்குப் பதிவு செய்து கொலையாளியைத் தேடி வந்த நிலையில், செல்லிடப்பேசி பதிவைக் கொண்டு கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com