ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நாட்டில் புதிதாக 6,395 பேருக்கு கரோனா பாதிப்பு

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 6,395 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

News image
Updated On :8 செப்டம்பர் 2022, 5:00 am

DIN

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 6,395 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்தியில்,

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6,395 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 33 பேர் சிகிச்சைப் பலனளிக்காமல் பலியாகியுள்ளனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 6,395 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். மொத்தம் இதுவரை 4,39,00,204 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு 50,342 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 36.31 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில், மொத்தம் 2.14 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.