மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்புபாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புதில்லி எஸ்ஐஆா்: முரண்பாடுகள் கொண்ட வாக்காளா் பட்டியலில் அத்வானி, சிசோடியா பெயா்கள்!

குஜராத்: ரசாயனத் தொழிற்சாலையில் தீ விபத்து, 4 பேர் பலி

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள ரசாயனத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20க்கும் அதிகமானோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Published On :

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள ரசாயனத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20க்கும் அதிகமானோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்தானது நேற்று (செப்டம்பர் 10) இரவு 10.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது. ரசாயனப் பொருட்கள் அடங்கிய கண்டெய்னரில் தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது. பின்னர் தொழிற்சாலையின் மற்ற இடங்களுக்கும் தீ பரவியுள்ளது. 

இந்த சம்பவம் குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது: “ முதல் நாளில் இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 3 பேர் காணவில்லை. பின்னர் இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளது தெரிய வந்தது. அதேபோல இந்த தீ விபத்தில் 20க்கும் மேலானோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு 15 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயிணைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்” என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.