டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

இது என்னுடைய வெற்றி மட்டுமல்ல ஜம்மு-காஷ்மீரின் வெற்றி: குலாம் அலி

இது என்னுடைய வெற்றி மட்டுமல்ல ஜம்மு காஷ்மீரின் வெற்றி என  மாநிலங்களவை உறுப்பினர் குலாம் அலி கருத்து தெரிவித்துள்ளார். 

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 5:39 am

DIN

இது என்னுடைய வெற்றி மட்டுமல்ல ஜம்மு காஷ்மீரின் வெற்றி என  மாநிலங்களவை உறுப்பினர் குலாம் அலி கருத்து தெரிவித்துள்ளார். 

கலை, அறிவியல், சமூக சேவை போன்ற பின்புலங்களிலிருந்து 12 பேரை மாநிலங்களவை நியமன உறுப்பினா்களாக குடியரசுத் தலைவா் நியமனம் செய்கிறாா். தற்போதைய நியமன உறுப்பினா்களில் ஒருவருடைய பதவிக் காலம் முடிவடைந்ததைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீரின் குலாம் அலி நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குலாம் அலி ஜம்மு-காஷ்மீரின் குா்ஜாா் இஸ்லாமிய சமூகத்தைச் சோ்ந்தவா். இச்சமூகத்தைச் சோ்ந்தவா் மாநிலங்களவைக்கு நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது குலாம் அலி கூறியதாவது: 

பாஜகவில் நாங்கள் பதவிக்காக வேலை செய்வதில்லை. கட்சிக்காக தன்னலமில்லாமல் வேலை செய்கிறோம். கட்சி எனது வேலை, விசுவாசத்தை கவனித்தது. பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது என்னுடைய வெற்றி மட்டுமல்ல ஜம்மு காஷ்மீரின் வெற்றி. 

நாம் ஆட்சிக்கு வருவோம் அப்போது அரசியல் அதிகாரம் கிடைக்காத மக்களுக்கு முன்னேற்ற உதவுவோம் என மோடி கூறியிருந்தார். தற்போது சொன்னதை செய்து காட்டிவிட்டார். இது குர்ஜார் சமூகத்தின் வெற்றி மட்டுமல்ல அனைத்து சமூகத்தின் வெற்றி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.