பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பகத்சிங் பிறந்த நாளில் ரத்த தானம் செய்யுங்கள்: அரவிந்த் கேஜரிவால்

சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த நாளில் நாடு முழுவதும் மக்கள் ரத்த தானம் செய்யுமாறு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :15 செப்டம்பர் 2022, 7:28 pm IST

சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த நாளில் நாடு முழுவதும் மக்கள் ரத்த தானம் செய்யுமாறு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் பிறந்த நாள் வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி கொண்டப்பட உள்ளது. இந்நிலையில், பகத்சிங் பிறந்த தினத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ரத்த தானம் செய்யுங்கள் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இது குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறிருப்பதாவது: “ நாட்டின் தலைநகர் தில்லியில் 50க்கும் அதிகமான இடங்களில் ரத்த தான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள இளைஞர்கள் அனைவரும் வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி பகத்சிங் பிறந்த நாளில் ரத்த தானம் செய்ய வேண்டும். பகத்சிங்கின் கொள்கைகள் ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ள தில்லி மற்றும் பஞ்சாப் அரசினால் பின்பற்றப்பட்டு வருகிறது. உங்களது இருப்பிடங்களில் ரத்த தான முகாம்கள் இல்லாவிட்டாலும், நீங்கள் முகாம்கள் ஏற்பாடு செய்ய முயற்சியினை முன்னெடுக்க வேண்டும். ரத்த தானம் செய்வது தான் இளம் வயதிலேயே நாட்டுக்காக தனது இன்னுயிரைத் தியாகம் செய்த பகத்சிங் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நாம் அளிக்கும் சிறப்பான மரியாதையாக இருக்கும். ஆம் ஆத்மி மட்டுமின்றி அனைத்துக் கட்சித் தலைவர்களும் ரத்த தான முகாம்கள் ஏற்பாடு செய்வதை முன்னெடுக்க வேண்டும்.” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.