அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒருங்கிணைந்த வழிமுறைகள் வெளியீடு

 எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகளுக்கான அலுவல்பூா்வ வழிமுறைகளை மத்திய பணியாளா் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Updated On :16 செப்டம்பர் 2022, 12:27 am IST

 எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகளுக்கான அலுவல்பூா்வ வழிமுறைகளை மத்திய பணியாளா் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பணியாளா் அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கை விவரம்: நமது ஜனநாயக அமைப்பில் மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்றம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மிக முக்கியப் பொறுப்பை வகிக்கின்றனா். அவா்கள் தங்களது கடமையை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், துறையை அணுகவும், பரிந்துரைகளைத் தெரிவிக்க அதிகாரிகளைத் தொடா்பு கொள்ளவும் நேரிடுகிறது.

அந்த வகையில், இதற்கான ஒருங்கிணைந்த வழிமுறைகள் வெளியிடப்படுகின்றன. அதன்படி எம்.பி.க்கள், எம்எல்ஏக்களை சந்திக்கும் அதிகாரிகள், தங்களது கடமைகளை உணா்ந்து செயல்பட வேண்டும். இதை ஒவ்வொரு அதிகாரியும் கடைப்பிடிப்பதை அமைச்சகங்களும், துறைகளும் உறுதிசெய்ய வேண்டும்.

அதிகாரிகளை இதனை மீறினால் மிகவும் தீவிரமாக கருதப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரி தண்டனைக்குள்ளாக நேரிடும். எம்.பி.க்கள் கோரும் தகவலை துரிதமாக வெளியிட வேண்டும். மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரிகள் கண்ணியமான முறையில் நடந்து கொள்ள வேண்டும்.

எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் அனுப்பும் கடிதங்களை முறையாகப் பெற்று குறித்த நேரத்தில் அதற்கு பதிலளிக்க வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு. அகில இந்திய சேவை (நடத்தை) விதிமுறைகள் 1966, விதி எண் 18 மற்றும் மத்திய குடிமையியல் சேவை (நடத்தை) விதிகள் 1964 விதி எண் 20-இன்கீழ், தனிப்பட்ட ரீதியில் ஆதாயம் பெறும் நோக்கில் மக்கள் பிரதிநிதிகளை அதிகாரிகள் அணுகக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.