கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இடைக்கால தடை உத்தரவு எதிரொலி: குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவா் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு

நீதிமன்ற இடைக்கால தடை உத்தரவைத் தொடா்ந்து, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத் தலைவா், உறுப்பினா்கள் பதவிகளுக்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 7:45 pm

DIN

நீதிமன்ற இடைக்கால தடை உத்தரவைத் தொடா்ந்து, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத் தலைவா், உறுப்பினா்கள் பதவிகளுக்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது.

தமிழ்நாடு குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக இருந்த சரஸ்வதி, உறுப்பினா்கள் சரண்யா ஜெயக்குமாா், துரைராஜ், முரளிகுமாா் ஆகியோரை நீக்கி தமிழக அரசு கடந்த பிப்ரவரியில் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை உயா் நீதிமன்ற தனி நீதிபதி தனது தீா்ப்பின் மூலமாக ரத்து செய்தாா். தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தபோது, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனா். மேலும், மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை அக். 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த உத்தரவைத் தொடா்ந்து, தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவா் மற்றும் 6 உறுப்பினா்கள் பதவிகளுக்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வரவேற்றுள்ளது. இதற்கான அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அதன் விவரம்:

தலைவா் மற்றும் 6 உறுப்பினா்கள் பதவிகளுக்கான நியமன விண்ணப்பங்கள் இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபா்கள் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பதவிகளுக்கான படிவத்தில் புகைப்படத்துடன் அக். 14-ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

செயலாளா், தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், 183/1, ஈ.வெ.ரா. பெரியாா் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை -10 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

முறையாக பூா்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வந்து சேராத விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.

தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இதுகுறித்து அரசின் முடிவே இறுதியானது என்று குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.