மதுராந்தகம், தாராபுரத்துக்கு அக். 6 வாக்குப் பதிவு, அக். 9 வாக்கு எண்ணிக்கை - தேர்தல் ஆணையம்மதுராந்தகம், தாராபுரத்திற்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

மேற்கு வங்கம்: பள்ளியில் வெடிகுண்டு வெடித்ததால் மாணவர்கள் பீதி

மேற்கு வங்கத்தில் உள்ள பள்ளியில் வெடிகுண்டு வெடித்ததால் மாணவர்கள் பீதியடைந்துள்ளனர்.

கோப்புப்படம்

Published On :1 பிப்ரவரி 2024, 3:51 pm IST

மேற்கு வங்கத்தில் உள்ள பள்ளியில் வெடிகுண்டு வெடித்ததால் மாணவர்கள் பீதியடைந்துள்ளனர்.

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பரகானாஸ் பகுதியில் உள்ள பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரையில் சனிக்கிழமை நாட்டு வெடிகுண்டு வெடித்தது. திதாகர் பள்ளியில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். திதாகர் உயர்நிலைப் பள்ளியில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது, ​​​​சனிக்கிழமை காலை 11 மணியளவில் மேற்கூரை மேல் இருந்து வெடிச் சத்தம் கேட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த ஆசிரியர்கள் மேற்கூரையின்  பகுதி சேதமடைந்திருப்பதை கண்டனர்.

பள்ளி கட்டிடத்தின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனரா அல்லது பள்ளியில் முன்பே நாட்டு வெடிகுண்டு வைக்கப்பட்டதா என்பது குறித்து முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.