மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

குறையும் கரோனா பாதிப்பு: நாட்டில் புதிதாக 4,043 பேருக்கு தொற்று

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,043 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :20 செப்டம்பர் 2022, 4:54 am

DIN

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,043 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 4,858 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4,676 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,39,67,340 ஆக பதிவாகியுள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 98.71 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 47,379 ஆக உள்ளது. 

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,370 ஆக உள்ளது. இறப்பு விகிதம் 1.19 ஆக உள்ளது.

நாட்டில் இதுவரை 2,16,83,24,537 டோஸ் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 13,10,410 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.