
கேரளத்தில் கரோனா தொற்று பரவலைக் தடுக்கும் விதமாக அறிவிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை ரத்து செய்து அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாட்டின் இதர மாநிலங்களைக் காட்டிலும் கேரளத்தில் கரோனா தொற்று பரவலானது தொடர்ச்சியாக அதிகரித்து வந்தது. பல்வேறு மாநிலங்களில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வந்த நிலையில் தொற்று பரவலைத் தடுக்க கேரளத்தில் முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகள் தொடர்ந்து வந்தன.
இந்நிலையில் மாநில சுகாதாரத்துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் மாநிலம் முழுவதும் விதிக்கப்பட்டிருந்த கரோனா கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையான முகக்கவசத்தை அணிய மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரளத்தில் தற்போது 2,398 பேர் கரோனா தொற்று பாதிப்புகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.