மேற்கு வங்கத்தில் ஆசன்சோல் மக்களவைத் தொகுதி மற்றும் பாலிகஞ்ச் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள ஆசன்சோல் மக்களவைத் தொகுதி மற்றும் பாலிகஞ்ச் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆசன்சோலில் 64.03 சதவிகித வாக்குகளும், பாலிகஞ்சில் 41.1 சதவிகித வாக்குகளும் பதிவாகின.
இதையும் படிக்க.. அடுத்த அலை உருவாகுமா? கேள்விக்குக் கிடைத்த நல்ல பதில்
இவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்றது.
பாலிகஞ்ச் தொகுதியில் திரிணமூல் வேட்பாளர் பாபுல் சுப்ரியோவும், ஆசன்சோல் தொகுதியில் திரிணமூல் வேட்பாளர் சத்ருகன் சின்ஹாவும் வெற்றி பெற்றுள்ளனர்.
ஆசன்சோல் தொகுதி பாஜக எம்.பி.யாக இருந்த பாபுல் சுப்ரியோ பதவியை ராஜிநாமா செய்து கட்சியிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார். பிறகு, பாலிகஞ்ச் இடைத்தேர்தலில் திரிணமூல் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார். காங்கிரஸிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் இணைந்த நடிகர் சத்ருகன் சின்ஹா அக்கட்சி சார்பில் ஆசன்சோல் தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


