அதிகரிக்கும் கரோனா 4வது அலைக்கு வழிவகுக்காது: ஆராய்ச்சியாளர்கள்

நாட்டில் ஒரு சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிகரித்து வரும் கரோனா நான்காவது அலைக்கு வழிவகுக்காது என்று உயர் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 
அதிகரிக்கும் கரோனா 4வது அலைக்கு வழிவகுக்காது: ஆராய்ச்சியாளர்கள்

நாட்டில் ஒரு சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிகரித்து வரும் கரோனா நான்காவது அலைக்கு வழிவகுக்காது என்று உயர் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலைச் சேர்ந்த மூத்த ஆராய்ச்சியாளர் மருத்துவர் கங்காகேதார், ஒமைக்ரானின் மாற்றமடைந்த தொற்றுகள் இருந்தாலும், தற்போது புதுவகையான தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது நான்காவது அலைக்கு வழிவகுக்காது. 

இந்தியாவில் நான்காவது அலை வரும் என்று எந்தவகையிலும் கருதவில்லை. உலகம் முழுவதுமுள்ள மக்கள் அனைவருமே பிஏ.2 மாற்றமடைந்த வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

இரண்டாவது பிரச்னை, பள்ளிகளையும், கல்லூரிகளையும் நாம் மீண்டும் திறந்துள்ளோம். இதன் விளைவு சமூகப் பரவலில்தான் முடியும். வெளியே சென்று வருவதால் பாதிக்கப்படும் விகிதம் இருந்துகொண்டே இருக்கும்.

இதனால் இதுபோன்ற பரவல்கள் கட்டுப்பாடுகளை முழுவதுமாக நீக்கும்போது ஏற்படுபவைதான். கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், முகக்கவசம் அணியாமல் இருப்பதைத் தவிக்க வேண்டும். 

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள பிஏ.4, பிஏ.5, போன்ற மாற்றமடைந்த தொற்றுகள் ஒமைக்ரான் வகையைச் சேர்ந்தவைதான். இதனால் எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் இயற்கையான பரவல் முழுவதுமாக தவிர்க்கப்படாது. மேலும் இது போன்ற மறு சேர்க்கைக்கொண்ட தொற்றுகள் அதிக நாள்களுக்கு இருக்காது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் இத்தகைய மறுசேர்க்கை விபத்தாக நேர்வதுதான். அது வைரஸ்களின் இயற்கை பரிமாணம் அல்ல. அதனால் நான்காம் அலை குறித்து கவலைக்கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com