ஹிமாச்சல்: காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா ராஜிநாமா

ஹிமாச்சல் சட்டமன்றத் தேர்தலுக்கான வழிநடத்தல் குழுத் தலைவர் பதவியிலிருந்து ஆனந்த் சர்மா ராஜிநாமா செய்வதாக தெரிவித்துள்ளார். 
ஹிமாச்சல்: காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா ராஜிநாமா

ஹிமாச்சல் சட்டமன்றத் தேர்தலுக்கான வழிநடத்தல் குழுத் தலைவர் பதவியிலிருந்து ஆனந்த் சர்மா ராஜிநாமா செய்வதாக தெரிவித்துள்ளார். 

இந்திரா காந்தி அவர்களால் 1984இல் மாநிலங்களவை உறுப்பினரானவர் காங்கிரஸில் முக்கியமான பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் நாள் ஹிமாச்சலின் சட்டமன்றத் தேர்தலுக்கான வழிநடத்தல் குழுத் தலைவராக தேர்வு செய்யப்படார். ஆனால் அவரை கலந்தாலோசிக்காமலே முடிவுகள் எடுக்கப்படுவதால் அவர் விரக்தியடைந்ததாக தெரிகிறது. 

அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: 

ஹிமாச்சல பிரதேச தேர்தலுக்கான காங்கிரஸின் வழிநடத்தல் குழுவின் தலைவர் பதவியில் இருந்து கனத்த மனதுடன் ராஜிநாமா செய்துள்ளேன். நான் வாழ்நாள் முழுவதும் காங்கிரஸ்காரன் என்றும் எனது நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறேன் என்றும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

என் ரத்தத்தில் ஊறிப்போன காங்கிரஸ் சித்தாந்தத்தில் உறுதியாக இருக்கிறேன், இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்! இருப்பினும், தொடர்ந்து ஒதுக்கப்படுதல் மற்றும் அவமானப்படுத்தப்படுவதால், ஒரு சுயமரியாதை நபராக எனக்கு ராஜிநாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com