திருப்பதி செல்ல இனி கரோனா சான்றிதழ் கட்டாயம்!

திருப்பதியில் வரும் ஜனவரி 1 முதல் 11 வரை சிறப்பு தரிசனம் செய்ய முன்பதிவு செய்வோருக்கு கரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என திருப்பதி - திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 
திருப்பதி (கோப்புப் படம்)
திருப்பதி (கோப்புப் படம்)


திருப்பதியில் வரும் ஜனவரி 1 முதல் 11 வரை சிறப்பு தரிசனம் செய்ய முன்பதிவு செய்வோருக்கு கரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என திருப்பதி - திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

இரண்டு தவணை தடுப்பூசி போடாதவர்கள் கரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை தரிசனத்துக்கு வரும்போது அளிக்க வேண்டும் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

உலக புகழ் பெற்ற திருப்பதி கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது வைகுந்த ஏகாதசி தொடங்கியுள்ளதால், வைகுண்ட நுழைவு வாயில் திறக்கப்பட்டு 11ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதனிடையே கரோனா பரவலும் நாட்டில் அதிகரித்து வருவதற்கான சூழல் நிலவுவதால், கடும் கட்டுப்பாடுகளை தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜன.1 முதல் 11 வரை சிறப்பு தரிசனம் செய்ய முன்பதிவு செய்வோருக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

ரூ.300 டிக்கெட் பெரும் பக்தர்கள் தடுப்பூசி சான்றிதழ் கொடுப்பது அவசியம் என்றும், இரண்டு தவணை தடுப்பூசி போடாதவர்கள் கரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை தரிசனத்துக்கு வரும்போது அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com