தில்லி: சிஎன்ஜி நிலையத்தில் ஊழியர்கள் 3 பேர் கொலை
தில்லி குருகிராம் விரைவு சாலையில் உள்ள சிஎன்ஜி நிலையத்தில் ஊழியர்கள் 3 பேர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.


தில்லி குருகிராம் விரைவு சாலையில் உள்ள சிஎன்ஜி நிலையத்தில் ஊழியர்கள் 3 பேர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
தில்லி குருகிராம் விரைவு சாலையில் சிஎன்ஜி நிலையம் உள்ளது. இங்கு இன்று அதிகாலை 3 மணிக்கு வந்த மர்ம நபர்கள் நிலைய மேலாளர் உள்பட 3 பேரை கொலை செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பியோடிவிட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் கொலை தொடர்பாக அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க- அமெரிக்க விசா விண்ணப்பதாரா்களுக்கு நோ்காணலில் விலக்கு
இதுகுறித்து கிழக்கு குருகிராமின் துணை ஆணையர் வீரேந்திர விஜ் கூறுகையில், சிஎன்ஜி நிலையத்தில் மூன்று ஊழியர்கள் இறந்து கிடந்தனர். சம்பவம் அதிகாலை 3 மணியளவில் நடந்துள்ளது. பணம் எதுவும் காணாமல் போகவில்லை.
கொலைக்கு முன்பாக சிசிடிவி கேமராக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...