கரோனா பரவலுக்கு மத்தியிலும் தத்கால் மூலம் ரயில்வேக்கு ரூ.522 கோடி வருவாய்

கரோனா பாதிப்பு தீவிரமாக இருந்த 2020-21-ஆம் ஆண்டில் தத்கல் பயணச்சீட்டு முன்பதிவு, பிரீமியம் தத்கால் முன்பதிவு ஆகியவை மூலம் ரூ.522 கோடி வருவாயை இந்திய ரயில்வே ஈட்டியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா பாதிப்பு தீவிரமாக இருந்த 2020-21-ஆம் ஆண்டில் தத்கல் பயணச்சீட்டு முன்பதிவு, பிரீமியம் தத்கால் முன்பதிவு ஆகியவை மூலம் ரூ.522 கோடி வருவாயை இந்திய ரயில்வே ஈட்டியுள்ளது.

கடந்த 2020-21ஆம் ஆண்டில் கரோனா பாதிப்பு தீவிரமாக இருந்தது. அப்போது கரோனா பரவலை தடுக்க சில மாதங்கள் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. கரோனா பாதிப்பின் தீவிரம் தணியத் தொடங்கியபோது படிப்படியாக மீண்டும் ரயில் சேவைத் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு வருவாய் தொடா்பாக மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த சந்திரசேகா் கெளா் என்பவா் தகவல் அறியும் சட்டத்தின் கீழ், இந்திய ரயில்வேயிடம் கேள்வி எழுப்பியிருந்தாா். அதற்கு ரயில்வே அளித்துள்ள பதில்:

கடந்த 2019-20-ஆம் ஆண்டு தத்கல் பயணச்சீட்டு முன்பதிவு மூலம் ரூ.1,669 கோடி, பிரீமியம் தத்கால் பயணச்சீட்டு முன்பதிவு மூலம் ரூ.603 கோடி வருவாயை இந்திய ரயில்வே ஈட்டியது. அந்த நிதியாண்டில் வளா் விகித கட்டண முறை மூலம் ரூ.1,313 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.

2020-21 நிதியாண்டில் தத்கால் முன்பதிவு மூலம் ரூ.403 கோடி, பிரீமியம் தத்கால் முன்பதிவு மூலம் ரூ.119 கோடி, வளா் விகித கட்டண முறை மூலம் ரூ.511 கோடி வருவாய் கிடைத்தது.

2021-22-ஆம் நிதியாண்டின் செப்டம்பா் மாதம் வரை தத்கால் முன்பதிவு மூலம் ரூ,.353 கோடி, பிரீமியம் தத்கல் முன்பதிவு மூலம் ரூ.89 கோடி, வளா் விகித கட்டண முறை மூலம் ரூ.240 கோடி வருவாய் பெறப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com