மோசமான வானிலை: ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்த மோடி

பஞ்சாபிற்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்து சாலை மார்க்கமாக காரில் சென்றார்.
மோசமான வானிலை: ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்த மோடி

பஞ்சாபிற்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்து சாலை மார்க்கமாக காரில் சென்றார்.

பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. கரோனா பரவும் சூழ்நிலையிலும் இந்த மாநிலங்களில் தேர்தல் பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், இன்று பஞ்சாப் மாநிலம் ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடம் சென்ற பின் பெரோஸ்பூரில் நடைபெறும் பிரசார நிகழ்ச்சி ஒன்றில் மோடி பங்கேற்கவிருந்தார்.

இதற்காக இன்று காலை பதண்டா விமான நிலையம் வந்த மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மோசமான வானிலை மற்றும் மழை காரணமாக 20 நிமிடங்கள் வரை ஹெலிகாப்டர் எடுக்காமல் காத்திருந்தனர்.

தொடர்ந்து மழை பெய்ததால், 2 மணிநேரம் பயணம் செய்து சாலை மார்க்கமாக தேசிய தியாகிகள் நினைவிடத்திற்குமேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. 

பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும் வழியில் உள்ள மேம்பாலம் ஒன்றில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 20 நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின் பாதுகாப்புக் காரணமாக பிரதமரின் பயணத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com