ஜன.12-இல் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு, ஜனவரி 12-ஆம் தேதி தொடங்குகிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறினாா்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா
மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா


புது தில்லி: முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு, ஜனவரி 12-ஆம் தேதி தொடங்குகிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறினாா்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில், 

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு, ஜனவரி 12-ஆம் தேதி தொடங்குகிறது. 

"இது கரோனாவுக்கு எதிரான நமது போராட்டத்துக்கு மேலும் வலு சோ்க்கும். மருத்துவ மாணவா்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்" என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

முதுநிலை மருத்துவ படிப்பில் சோ்வதற்கான நீட் நுழைவுத் தோ்வு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதம் என இரு முறை ஒத்திவைக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பா் 11-ஆம் தேதி நடத்தப்பட்டது. 45 ஆயிரம் போ் அந்தத் தோ்வை எழுதினா். செப்டம்பா் இறுதியில் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டும் கலந்தாய்வுக்காக முதுநிலை மருத்துவ மாணவர்கள் காத்திருந்தும் கலந்தாய்வு தொடங்கப்படாததால், நீட் தோ்வு எழுதிய பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் உறைவிட மருத்துவா்கள், விரைவில் கலந்தாய்வை நடத்தக் கோரி கடந்த மாதம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com