உபி: பாஜகவிலிருந்து 3-வது அமைச்சர் ராஜிநாமா; சமாஜவாதியில் இணைகிறார்?

உத்தரப் பிரதேச மாநிலத்தின் அமைச்சர் தரம்சிங் சைனி தன் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவைச் சந்தித்துள்ளார்.
அகிலேஷ் யாதவுடன் தரம்சிங் சைனி
அகிலேஷ் யாதவுடன் தரம்சிங் சைனி

உத்தரப் பிரதேச மாநிலத்தின் அமைச்சர் தரம் சிங் சைனி தன் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவைச் சந்தித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சிலர் தொடர்ந்து ராஜிநாமா செய்து வருகிறார்கள். இந்நிலையில், அடுத்த மாதம் அங்கு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தல் காரணமாக ராஜிநாமா செய்வதவர்கள் சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவைத் தொடர்ந்து சந்தித்தும் வருகிறார்கள்.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தை யார் வெல்ல இருக்கிறார்கள் என எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் வேளையில் கட்சித் தாவல்கள் மேலும் தேர்தலை சூடுபிடிக்கச் செய்திருக்கிறது. 

மேலும், இதுவரை பாஜக கட்சியிலிருந்து 5 எம்எல்ஏக்கள் மற்றும் 3 அமைச்சர்கள் தங்கள் ராஜிநாமைவை அறிவித்துள்ளனர்.

அமைச்சர் தரம்சிங் சைனி ராஜிநாமாவிற்கு பின் சமாஜவாதி கட்சியின் தலைவரைச் சந்தித்தார். இதுகுறித்து அகிலேஷ் யாதவ் தன் டிவிட்டர் பக்கத்தில், ‘தரம்சிங் சைனியை சமாஜவாதி கட்சிக்கு வரவேற்கிறேன். வாழ்த்துக்கள்’ எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com